R.புதுப்பட்டிணத்தில் நடைபெற்ற தமுமுக ஆலோசனை கூட்டம் !



புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றிய  தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி ஆலோசனை கூட்டம் நேற்று  (09/12/2018) மாலை 05.00 மணியளவில் ஒன்றிய தலைவர் அஜ்மல் கான் தலைமையில் நடைப்பெற்றது.


 கூட்டத்திற்கு  மனிதநேய மக்கள் கட்சி ஒன்றிய செயலாளர் முத்துக்குடா வஹாப் முன்னிலை வகித்தார். ஒன்றிய பொருளாளர் அபுதாஹிர், மாவட்ட துணைச் செயலாளர் சேக் தாவூதீன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்கள். ஒன்றிய துணை மற்றும் அணி நிர்வாகிகள் ,ஆர்.புதுப்பட்டினம் கிளை நிர்வாகிகள், முத்துக்குடா கிளை நிர்வாகிகள் மற்றும் கோபாலப்பட்டினம் கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 

கூட்டத்தில் ஒன்பது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் :1
ஆவுடையார்கோவில் தாலுகாவிற்கு உட்பட்ட கோபாலபட்டினம், முத்துக்குடா, அரசனகரிப்பட்டினம் மற்றும் ஆர்.புதுப்பட்டினம் உள்ளிட்ட அனைத்து ஊர்களுக்கும் நிரந்தரமாக பணி செய்வதற்கு ரேஷன் கடை ஊழியர் நியமனம் செய்ய வேண்டும். இல்லை எனில் போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தீர்மானம் : 2
ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் குறைதீர்க்கும் முகாம் 2014ம் ஆண்டு மீமிசல் பாப்புலர் பள்ளி வளாகத்தில் நடைபெற்றபொழுது நாட்டாணி புரசகுடி,  ஊராட்சிக்கு பழைய மின் கம்பங்களை அகற்றி புதிய மின் கம்பங்களை அமைத்தும்,  பழைய மின் கம்பிகளை அகற்றி புதிய மின் கம்பிகளை அமைத்து கொடுக்க வேண்டும் என மின்சாரத் துறை அதிகாரிகளை அழைத்து மாவட்ட ஆட்சியர் கூறியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை இதனை வன்மையாக கண்டிப்பதுடன் உடனடியாக நடவடிக்கை எடுக்க மின்சார வாரிய அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறோம்.

தீர்மானம் : 3
நாட்டாணி புரசகுடி ஊராட்சி  பொன்னமங்கலம் ஊராட்சிகளில் பழுதடைந்த சாலைகளுக்கு பதிலாக புதிய சாலை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.


தீர்மானம் : 4
முத்துக்குடா கடற்கரையில் முறையாக மின்விளக்கு அமைத்து  பழுதடைந்த மின்விளக்குகளை சரி செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்


தீர்மானம் : 5
கோபாலபட்டினம் அரசினர் மேல்நிலைப்பள்ளியை  பெண்கள் மேல்நிலைப் பள்ளியாக மாற்ற வேண்டும் என பள்ளி கல்வித்துறையை கேட்டுக்கொள்கின்றோம்.

தீர்மானம் : 6
மீமிசல் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவதற்கு தடை விதித்துள்ளனர். கல்வித்துறை இதற்கு விளக்கு அளித்தும் நடைமுறைப்படுத்தாமல் உள்ள தலைமை ஆசிரியரை கண்டிப்பதுடன் உடனடியாக நடைமுறை படுத்த வேண்டும் இல்லை எனில் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.


தீர்மானம் : 7
ஆவுடையார்கோவில் தாலுகாவில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் சாக்கடை பிரச்சனையை சரி செய்ய வேண்டும் இதனால் தொற்றுநோய் மற்றும் காய்ச்சல் உருவாகி பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இதனை ஊராட்சி நிர்வாகமும்,  சுகாதாரத்துறையும் இணைந்து  நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.


தீர்மானம் : 8
ஆர்.புதுப்பட்டினம் முஸ்லிம் தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பழுதடைந்த கட்டிடத்தை அப்புறப்படுத்தக் கோரி பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் பள்ளிக்கூட மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்களின் உயிரின் பாதுகாப்பு கருதி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் பள்ளிக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும்.


தீர்மானம் : 9 

முத்துக்குடாவில் உள்ள ஊரணியை சுத்தம் செய்து தர வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்தை கேட்டுக்கொள்கின்றோம்.

உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


Post a Comment