ஆர். புதுப்பட்டினம் முஸ்லீம் கிராம ஜமாஅத் சார்பாக 70வது குடியரசு தின விழா கொண்டாட்டம்….!



இந்திய திருநாட்டின் 70வது குடியரசு தின விழா நிகழ்ச்சி நேற்று (26/01/2019) ஆர். புதுப்பட்டினம் முஸ்லீம் கிராம ஜமாஅத் சார்பாக அல் அமீன் பொது விளையாட்டு திடலில் ஜமாஅத் தலைவர் பிரியம் J.காதர் தலைமை வகிக்க ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் இளைஞர்கள் முன்னிலையில் ஆவுடையார்கோவில் வட்டாச்சியர் திருமதி.ஜமுனா அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி வைத்தார்கள்.


இந்நிகழ்வில் மாவட்ட துணை கண்காணிப்பாளர் திரு.காமராஜ், கோட்டைப்பட்டினம் காவல்துறை ஆய்வாளர்  திரு.முத்துக்குமார், மீமிசல் வருவாய் ஆய்வாளர் திரு.சோனமுத்து, நாட்டாணி புரசக்குடி கிராம நிர்வாக அலுவலர் திரு.காளிமுத்து, மீமிசல் காவல்துறை உதவி ஆய்வாளர் திரு.ராஜேந்திரன், ஜெகதாப்பட்டினம் உதவி ஆய்வாளர் மலையரசன், கோட்டைப்பட்டினம் உதவி ஆய்வாளர் அன்பழகன், சிறப்பு உதவி ஆய்வாளர் மூர்த்தி, தலைமை காவலர்கள் மாரிமுத்து , பெரியசாமி உள்ளிட்ட சக காவலர்கள் மற்றும் முஸ்லீம் ஜமாஅத் நிர்வாகிகள் செயலாளர் சாகுல் ஹமீது, துணை தலைவர் ஜபருல்லா, பொருளாளர் அலி முகம்மது ( அரசு சுகாதார துறை ஓய்வு ) , நிர்வாக குழு உறுப்பினர்கள் அபுபக்கர், அல் அமீன் மன்ற தலைவர் ஜியாவுல் ஹக், அல் அமீன் முன்னாள் தலைவர் வழக்கறிஞர் சேக் தாவுது, அல் அமீன் ஆலோசனை குழு உறுப்பினர்கள் நவாஸ் கான், அஜ்மல் கான், துணைச் செயலாளர் கலந்தர் பாட்சா, ஊரில் உள்ள ஜமாஅத்தார்கள், தாய்மார்கள், சிறுவர்கள் பள்ளி குழந்தைகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.








Post a Comment