மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் ஆதார் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டுகோள் 27-ந்தேதி கடைசி நாள்






புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து கடல் மற்றும் உள்நாட்டு மீனவர், மீனவ மகளிர் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்கள் கூட்டுறவு சங்கங்களின் தேர்தலின் போது, தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்ட விதிகள் படி கூட்டுறவு சங்கம் தயாரித்து வெளியிட வேண்டிய பட்டியலில், உறுப்பினர்களின் ஆதார் எண் வெளியிட வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே, உதவி இயக்குனர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, புதுக்கோட்டை அலுவலக கட்டுப்பாட்டில் செயல்படும் அனைத்து கடல் மற்றும் உள்நாட்டு மீனவர், மீனவ மகளிர் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களும் தங்களது ஆதார் அட்டை நகல், புகைப்படங்கள், ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண் உள்ளிட்ட ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும்.

இந்த ஆவணங்களை வருகிற 27-ந் தேதிக்குள் தகுந்த அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். தவறும்பட்சத்தில், சங்க நிர்வாக குழு தேர்தலில் போட்டியிடவோ, கூட்டுறவு சங்க தேர்தலில் வாக்களிக்கவோ தகுதியிழக்க நேரிடும். மேலும், உறுப்பினர் பட்டியல் மற்றும் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்படும். எனவே உறுப்பினர்கள் தங்களின் விவரங்களை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகம், மணமேல்குடி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மீன்வள ஆய்வாளர், மீன்வள சார் ஆய்வாளர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை (அறந்தாங்கி, கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், தட்டாமனைப்பட்டி) உள்ளிட்ட அலுவலகங்களில் சமர்ப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
 

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments