அறந்தாங்கியில் கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வுப் பேரணி திங்கள் கிழமை (07/01/2019) நடைபெற்றது."மது அருந்துதல் மற்றும் கள்ளச்சாராயத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வுப் பேரணியை அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் க. பஞ்சவர்ணம் தலைமை வகித்து தொடக்கி வைத்தார்.
பேரணிக்கு, அறந்தாங்கி வட்டாட்சியர் க. கருப்பையா, கோட்ட கலால் அலுவலர் செல்வவிநாயகம், வருவாய் ஆய்வாளர் சி. முத்தரசு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
பேரணியில், கிராமிய கலைஞர்களின் கரகாட்ட நிகழ்ச்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் மூலம் மக்களுக்கு கள்ளச்சாராயத்துக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தாலுகா அலுவலகத்தில் தொடங்கிய பேரணி காமராசர் சிலை, காந்தி பூங்கா சாலை, பேருந்து நிலையம், பேராவூரணி சாலை வழியாக வந்து தாலுகா அலுவலகத்தில் நிறைவு பெற்றது. பேரணியில், காவல் துறையினர்,மகளீர் சுய உதவிக் குழுவினர், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் , கிராம உதவியாளர்கள் உள்ளிட்டோர் திரளாகக் கலந்து கொண்டனர்.