ஆவுடையார்கோவில் அடியார்குளம் ஊரணியில் மூழ்கி தொழிலாளி பலி




ஆவுடையார்கோவில் அடியார்குளம் ஊரணியில் மூழ்கி தொழிலாளி பலியானார்.

தொழிலாளி பலி

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் பாரதிநகரை சேர்ந்தவர் மணிமுத்து (வயது 40). தொழிலாளி. இவர் அடியார்குளம் ஊரணியில் குளிக்க சென்றார். அப்போது நிலைதடுமாறி ஊரணியில் தவறி விழுந்து மூழ்கி இறந்து கிடந்தார்.

பின்னர் அவரது உடல் ஊரணியில் மிதந்தது. இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து ஆவுடையார்கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் ேபாலீசார் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

போலீசார் விசாரணை

தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் ஊரணியில் இறங்கி மணிமுத்து உடலை மீட்டு வெளிேய கொண்டு வந்தனர். பின்னர் போலீசார் மணிமுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments