கோபாலப்பட்டிணம் பெரிய பள்ளிவாசலில் இன்று (ஜன.16) மிஃராஜ் சிறப்பு பயான் நிகழ்ச்சி!



புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணம் முஹ்யித்தீன் ஆண்டகை சுன்னத் வல் ஜமாஅத் பெரிய பள்ளிவாசலில், மிஃராஜ் தினத்தை முன்னிட்டு இன்று (16.01.2026) வெள்ளிக்கிழமை சிறப்பான மார்க்கச் சொற்பொழிவு மற்றும் துஆ மஜ்லிஸ் நடைபெற உள்ளது.

வியக்க வைக்கும் விண்வெளி பயணம்
இன்று மாலை மஃக்ரிப் தொழுகையைத் தொடர்ந்து நடைபெறவுள்ள இந்நிகழ்வில், "வியக்க வைக்கும் விண்வெளி பயணம்" என்ற தலைப்பில் சிறப்பு பயான் (சொற்பொழிவு) நடைபெறும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மிஃராஜ் பயணத்தின் சிறப்புகள் மற்றும் அதன் மூலம் மனித சமுதாயத்திற்கு கிடைத்த படிப்பினைகள் குறித்து விரிவாக விளக்கப்படவுள்ளது.

திக்ரு மற்றும் துஆ மஜ்லிஸ்
பயான் நிகழ்ச்சியைத் தொடர்ந்து, உலக அமைதி மற்றும் நல்வாழ்விற்காக திக்ரு மஜ்லிஸும், துஆ மஜ்லிஸ் நடைபெறவுள்ளது.

அழைப்பு
இந்த நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்கள், பெரியவர்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் என அனைவரும் திரளாகக் கலந்து கொண்டு மிஃராஜ் இரவின் பரக்கத்தை பெற்றுச் செல்லுமாறு கோபாலப்பட்டிணம் ஜமாஅத் நிர்வாகத்தினர் அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments