தமிழகத்தில் Almont Kid Syrup-க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் குழந்தைகளுக்கு சளி பிரச்சனையை சரிசெய்ய Almont Kid Syrup பயன்பாட்டில் உள்ளது. குறிப்பாக மூக்கு ஒழுகுதல், தும்மல், கண்களில் நீர் வடிதல் உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்கொள்ளும் குழந்தைகளுக்கு இந்த சிரப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இதுதவிர இன்னும் சில பிரச்சனைகளுக்கும் இந்த சிரப் வழங்கப்பட்டு வருகிறது. ஏராளமான குழந்தைகளுக்கு டாக்டர்களின் பரிந்துரையில் இந்த சிரப் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் Almont Kid Syrup விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சிரப்பை பீகாரைச் சேர்ந்த 'டிரிடஸ் ரெமிடிஸ்' (Tridus Remedies) என்ற நிறுவனம் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்த சிரப்பின் பேட்ச் நம்பர். ஏஎல்-24002 (Batch No. AL-24002) என்ற தொகுப்பில் எத்திலீன் கிளைக்கால் என்ற இருப்பதை ஆய்வின் மூலமாக தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் ஆய்வு செய்து கண்டறிந்தது.
மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் (CDSCO) அளித்த எச்சரிக்கையை தொடர்ந்து தமிழக அரசு இந்த ஆய்வை மேற்கொண்டு சிரப்பை தடை செய்துள்ளது. இதனால் இந்த Almont Kid சிரப்பை தமிழகத்தில் அனைத்து சில்லறை விற்பனையாளர்கள், விநியோகஸ்தர்கள், மருத்துவமனைகளில் விற்பனை செய்யக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறிப்பிட்ட பேட்ச் தொடர்பான மருந்து உடனடியாக மருந்தகங்களில் இருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் கலந்துள்ள எத்திலீன் கிளைக்கால் ஒரு வேதிப்பொருளாகும். இது சிறுநீரகம், மூளை, நுரையீரல் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த மருந்தின் விநியோகத்தை தடக்க மருந்தகங்கள், மருத்துவமனையில் தமிழக அரசு தீவிர கண்காணிப்பை மேற்கொண்டுள்ளது.
பொதுமக்களும் இதுதொடர்பான புகாரை பதிவு செய்யலாம். புகாரை பதிவு செய்ய விரும்புவோர் 94458 65400 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே புதுச்சேரி உள்பட சில மாநிலங்களில் இந்த சிரப்புக்கு தடை உள்ளது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.