GPM மக்கள் மேடை சார்பாக குடிநீர் சுத்திகரிப்பு ஆலை அடிக்கல் நாட்டு விழா



GPM மக்கள் மேடையின் கனவு திட்டமாக இருந்து வந்த ஆழ்குழாய் கிணறு (போர்) திட்டம் கடந்த நவம்பர் மாதம் (28/11/2018) அன்று  ஆரம்பிக்கப்பட்டு  டிசம்பர் மாதம்
(13/12/2018) அன்று பணி நிறைவு பெற்றது.
அதன் பிறகு 18/12/2018 அன்று காம்ப்ரஸர் கருவி கொண்டு  பைப்புகளில் உள்ள அடைப்புகள் எடுக்கப்பட்டு சுத்தமான குடிநீர் வந்தது.

அதன் அடிப்படையில் அந்த இடத்தில் குடிநீர் சுத்திகரிப்பு ஆலைக்கான (RO WATER PLANT) அடிக்கல் நாட்டு விழா நேற்று (05/01/2019) ஊர் பொதுமக்கள் மற்றும் மக்கள் மேடை உறுப்பினர்கள் முன்னிலையில் துவங்கப்பட்டது. 


ஹட்ரஜனின் அளவு (PH)

(பொட்டன்ஷியல்  (pH) 6.5 முதல் 7.5 வரை இருந்தால் அமிலமும், காரமும் அதிகமில்லாத நடுநிலை. 6.5க்கு கீழே இருந்தால் அமிலத்தன்மை உடையது. இத்தகைய தண்ணீரை தொடர்ந்து குடித்தால் அல்சர், வயிற்றுப் புண் ஏற்படும்.8.5க்கு மேல் இருந்தால் தண்ணீர் காரத்தன்மை உடையது. இதைத் தொடர்ந்து குடித்தால் சிறுநீரகக் கற்கள் உருவாகும். தற்போது நமது போரில் வரக்கூடிய நீரின் PH அளவு 8.4 ஆக உள்ளது.ஆகவே இந்த தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றதாக அமைந்துள்ளது.

Post a Comment