ஆவணியாபுரம் மாணவன் கொலையில் திடுக்கிடும் தகவல்…!



தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூர் அருகே உள்ள ஆவணியாபுரத்தை சேர்ந்த மும்தஸிர் மயிலாடுதுறையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். அவரை கடத்தி சென்ற சிலர் 5 லட்ச ரூபாய் கேட்டு மும்தஸிரின் தாயை மிரட்டியுள்ளனர்.

இதையடுத்து, மும்தசிரை போலீசார் தேடிவந்த நிலையில், திருபுவனம் வீரசோழன் ஆற்றிற்கு செல்லும் வழியில் மும்தஸிர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு புதரில் பிணமாக கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. உடலை கைப்பற்றிய போலீசார் 5 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.





கொலை செய்தவர்கள்:





இதையடுத்து, மும்தஸிரை கொலை செய்ததாக அவரது சக நண்பர்களான நியாஸ் அகமது, முகமது கலீல் மற்றும் சலீம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். காதல் பிரச்சினையால் இக்கொலை நடைபெற்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.மேலும் குற்றவாளிகளிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Post a Comment