தோட்டக்கலைத்துறை மூலம் தொழில் பழகுனர் பயிற்சியில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்



தோட்டக்கலைத்துறை மூலம் தொழில் பழகுனர் பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சு.கணேஷ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது.

 இந்திய விவசாயத்தில் தோட்டக்கலைத்துறை முக்கிய பிரிவு மற்றும் துடிப்பான ஒரு அங்கமாக உள்ளது. தோட்டக்கலைத்துறை விவசாயிகளின் உற்பத்தியினை இருமடங்காக்கி வருமானத்தை மும்மடங்காக உயர்த்தும் முக்கிய நோக்கத்துடன் செயல்பட்டுவருகிறது.

        தொழிற்பழகுனர் பயிற்சி அளிப்பதன் மூலம் சந்தையில் வேலை வாய்ப்பு அளிப்பவர்களுக்கும் திறன் மிக்க மாணவர்களுக்கும் உள்ள இடைவெளியினை பூர்த்தி செய்யவும், விவசாயிகளுக்கும் தொழில் நுட்பத்திற்கும் இடையே இணைப்பு பாலமாக விவசாயிகளுக்கு உதவும் வகையில் 500 தொழில் பழகுனர்களுக்கு தோட்டக்கலைத் துறையில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. தோட்டக்கலைத்துறையில் தொழிற்பழகுனர் பயிற்சி வேலையில்லா படித்த இளைஞர்களுக்கு அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கான மாற்று வழிகாட்டியாக திகழ்வதுடன், இளைஞர்களின் திறமையை வெளிகொணர்வதோடு, ஒரு பணியினை தன்னம்பிக்கையுடன் மேற்கொள்ள உதவுகிறது.

          கார்டனர் பயிற்சிக்கு குறைந்த கல்வித்தகுதியாக 10ஆம் வகுப்பு அல்லது 12-ஆம் வகுப்பு, தோட்டக்கலையில் டிப்ளமோ இருத்தல் வேண்டும். டிராப்ட் மேன் சிவில்,எலக்ட்ரிசியன், பிளம்பர், பிட்டர் மற்றும் கார்டனர் துறையில் அங்கீகரிக்கப்பட்ட தகுதித் தொகுப்பிலுள்ள குறுகிய கால திறன்களில் பயிற்சி பெற்றவர்களாக இருத்தல் வேண்டும்.

        தொழில் பழகுனர் பயிற்சியின் மூலம் மத்திய அரசின் நிதி உதவியுடன் ஒருவருட காலம் பயிற்சி பெற்ற தொழில்நுட்ப தகுதியுடைய மற்றும் முன் அனுபவம் இல்லாத இளைஞர்களுக்கு பல்வேறு திட்டங்களில் பணி பெறுவதற்கான வாய்ப்பளிக்கப்படுகிறது. ஓராண்டு பயிற்சி முடித்தப்பின் தொழில் முனைவோர் பயிற்சி மையத்தினர் நடத்தும் ஆன்லைன் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற பின் சான்றிதழ் வழங்கப்படும். இச்சான்றிதழில் மாநில, மத்திய மற்றும் அயல்நாடுகளில் பணிபுரிய வாய்ப்பு அளிக்கிறது. இப்பயிற்சியில் ஓராண்டிற்று 500 தொழில் முனைவோர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களில் மாதம் ரூ.7000 உதவிதொகையாக வழங்கப்படும். எனவே, தொழில் பழகுனர் பயிற்சியில் ஈடுபட ஆர்வம் உள்ள இளைஞர்கள் www.tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி ddhpudukottai@yahoo.com செய்து என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சு.கணேஷ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். 

Post a Comment