ஆவுடையார்கோவில், அமரடக்கி, வல்லவாரி பகுதிகளில் நாளை (ஜன.31) மின்தடை!



ஆவுடையார்கோவில், அமரடக்கி, வல்லவாரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை சனிக்கிழமை (ஜனவரி 31) மின்தடை ஏற்படும் என்று தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

​இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

​அறந்தாங்கி கிராமியம் உபகோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 33/11KV ஆவுடையார்கோவில், அமரடக்கி மற்றும் வல்லவாரி ஆகிய துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

​இதன் காரணமாக, இந்த துணைமின் நிலையங்களில் இருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் வரும் 31.01.2026 (சனிக்கிழமை) அன்று காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

முக்கிய அறிவிப்பு

அதே சமயம், கொடிக்குளம் மற்றும் கரூர் துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளுக்கு மின்தடை ஏதும் கிடையாது. அந்தப் பகுதிகளில் வழக்கம் போல் மின் விநியோகம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

​எனவே, மின்தடை அறிவிக்கப்பட்ட பகுதி பொதுமக்களும் மின் நுகர்வோர்களும் பராமரிப்புப் பணிகளுக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments