2 ஆம் கட்ட இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு! புதிதாக விண்ணப்பித்தவர்கள் தெரிந்து கொள்ளலாம்!



புதிய வாக்காளர்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா ? என்பதை இன்று முதல் அறிந்து கொள்ளலாம் என சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஏழு லட்சத்து 31 ஆயிரம் பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்திருந்தனர். இதுதொடர்பாக சென்னை வளசரவாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாநகராட்சி ஆணையருமான பிரகாஷ், தேர்தல் ஆணையம் 2 ஆம் கட்ட இறுதி வாக்காளர் பட்டியலை நாளை வெளியிட உள்ளதாகக் கூறினார்.

சிறப்பு முகாம்கள் மூலம் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டோருக்கு, வாக்காளர் அடையாள அட்டை வரத் தாமதமாகும் என்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் தெரிவித்தார். சென்னையில் 32 வேட்பாளர்களுக்கு மேல் இருப்பதால், மற்ற மாநிலங்களில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வரவழைக்கப்படும் என்றும் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் கூறினார். 

Post a Comment

0 Comments