கோட்டைப்பட்டினம் காரியாலயத்தில் மஜக ஆலோசனை கூட்டம்..!



மனிதநேய ஜனநாயக கட்சியின் மணமேல்குடி ஒன்றியம் சார்பில் இன்று கோட்டைப்பட்டினம் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் காரியாலயத்தில் ஆலோசனை கூட்டம் MJTS மாவட்ட செயலாளர் T. ஷாஜி தீன் (ஒன்றிய தேர்தல் பணிக்குழு தலைவர்) தலைமையில் நடைபெற்றது.

இதில் எதிர்வரும் ஏப்ரல்.18 அன்று நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் திமுக-காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி முஸ்லீம் லீக் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் திரு. நவாஸ் கனி அவர்களை வெற்றிபெற செய்ய மனிதநேய சொந்தங்களின் தேர்தல் வியூகங்கள் குறித்து பல முக்கிய ஆலோசனைகள் செய்யப்பட்டன.

இக்கூட்டத்தில் மஜக மாவட்ட துணை செயலாளர் அரசை செய்யது, மாவட்ட மீனவர் அணி செயலாளர் முஜிபுரஹ்மான், மணமேல்குடி ஒன்றிய செயலாளர் முகம்மது மைதீன்(செல்லஅத்தா), கோட்டைப்பட்டினம் நகர செயலாளர் முகம்மது சாலிஹ்(ரஸ்தாலி) ஆகியோர் முன்னிலை வகுத்தனர்.

இதில் மனிதநேய சொந்தங்கள் திரளாக கலந்து கொண்டனர். விரைவில் தொகுதி வேட்பாளரை ஆதரித்து செயல்வீரர்கள், வீராங்கனைகள் கூட்டம் மற்றும் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல பகுதிகளில் தலைமை பேச்சாளர்களை அழைத்து தெருமுனை கூட்டம் நடத்துவது என ஏக மனதாக முடிவெடுக்கப்பட்டது.

தகவல்;
#மஜகதகவல்தொழிநுட்ப_அணி
#MJK_IT_WING
#இராமநாதபுரம்பாராளுமன்றதொகுதிதேர்தல்பணிக்குழு.

Post a Comment

0 Comments