புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் அவசர மருத்துவ சிகிச்சைக்கான பட்ட மேற்படிப்பு வகுப்பு தொடங்குவதற்கு இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.
இதைத் தொடர்ந்து நிகழாண்டிலேயே இந்த வகுப்புக்கான சேர்க்கை தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அழ. மீனாட்சி சுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி கடந்த 2017-இல் தொடங்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளாக எம்பிபிஎஸ் வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அவசர மருத்துவ சிகிச்சைக்கான பட்ட மேற்படிப்பு வகுப்பைத் தொடங்க அனுமதி வழங்கக் கோரி மருத்துவக் கல்லூரியில் இருந்து இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இந்திய மருத்துவக் கவுன்சிலின் தேசிய மருத்துவத் தேர்வுக்குழும உறுப்பினர் ஹர்ஷா டி. மக்வானா கடந்த பிப்ரவரி மாதம் மருத்துவக் கல்லூரியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து அறிக்கை அளித்தார்.
தற்போது, அவசர மருத்துவச் சிகிச்சைக்கான பட்ட மேற்படிப்பு (டிஎன்பி) தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் இரு இடங்கள் உள்ளன.
தற்போது எம்பிபிஎஸ் பட்டப் படிப்பில் மருத்துவப் பயிற்சியை நிறைவு செய்தவர்கள் இந்தப் பட்ட மேற்படிப்பில் சேரலாம். விண்ணப்பங்களை வழக்கம்போல இணையதளம் மூலம் விண்ணப்பித்து அகில இந்திய நுழைவுத் தேர்வின் மூலம்தான் இந்த இரு இடங்களும் நிரப்பப்படும்.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.