கோபாலப்பட்டினத்தை சேர்ந்த நசீர் கான் அவர்கள் லண்டன் கவண்ட்ரி பல்கலைக்கழகத்தில் M.S., முதுநிலைப் பட்டம் பெற்றார்!



கோபாலப்பட்டினம் அரஃபா 2-வது வீதியை சேர்ந்த, KNN.லியாக்க‌த் அலி மற்றும் MP சேக் உதுமான் (No.3) ஆகியோரின் பேரனும், ஜனாப். அகமது ஜலாலுதீன் - கமர் நிஷா அவர்களின் புதல்வரும், முகமது நூருல்லாஹ் அவர்களின் சகோதரர் Er.நசீர் கான் அவர்கள்,

இங்கிலாந்து தலைநகர் லண்டன் அருகில் உள்ள கவண்ட்ரி பல்கலைக்கழகத்தில் (Coventry university) பயின்று, கட்டிட மேலாண்மையில் முதுநிலை பட்டம் (Masters in Construction Management with Merit) பெற்றுள்ளார்.


நேற்று 10/04/2019 புதன்கிழமை காலை 11:30 மணியளவில் கவண்ட்ரி பேராலாயத்தில் (Coventry Cathedral) நடைபெற்ற விழாவில், பல்கலைக்கழக வேந்தர் மார்கரேட் கேஸ்லி (Margaret Casely) கலந்து கொண்டு பொறியாளர் நசீர் கான் அவர்கள் உட்பட அங்கு பயின்ற ஏராளமானோருக்கு சான்றிதழ்களை வழங்கினார்.




பொறியாளர் சேவைகளில் சிறந்து விளங்கிட GPM MEDIA-வின் சார்பாக  வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

தகவல்: GPM மீடியா செய்திகளுக்காக முகமது நூருல்லாஹ் 

Post a Comment

0 Comments