பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு !



தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை 29-ம் தேதி வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை மொத்தம் ஒன்பது லட்சத்து, 97 ஆயிரம் பேர் எழுதியுள்ள நிலையில், தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. விடைத்தாள் திருத்தும் பணிகள் கடந்த 16ஆம் தேதி முடிவடைந்த நிலையில், மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாணவர்கள் தாங்கள் பதிவு செய்த செல்போன் எண் மூலம் தேர்வு முடிவுகளை குறுஞ்செய்தியாக பெறலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தேர்வு முடிவுகள் நாளை 29/04/2019 திங்கள்கிழமை காலை 9.30 மணியளவில் வெளியிடப்பட உள்ளது.

அதன்படி மாணவர்கள்,

www.tnresults.nic.in ,
www.dge1.tn.nic.in ,
www.dge2.tn.nic.in

ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9.97 லட்சம் மாணவர்கள் எழுதிய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 29-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 19-ல் வெளியானது. தொடர்ந்து பத்தாம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியிடும் பணிகள் இறுதிகட்டத்தில் உள்ளன. இந்த ஆண்டில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை மொத்தம் 9.97 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர்.

 தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் கடந்த 1-ம் தேதி தொடங்கி 16-ம் தேதியுடன் முடிவடைந்தது. மாணவர்கள் மதிப்பெண்களை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் தயாரிக்கும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், நாளை 29-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது.மாணவர்கள் தாங்கள் பதிவு செய்த செல்போன் எண் மூலம் தேர்வு முடிவுகளை குறுஞ்செய்தியாக பெற்றுக்கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments