கோபாலப்பட்டினம் ரஹ்மானியா குர்ஆன் மதரஸாவின் ஆண்டு விழா மற்றும் ரஹ்மானியா பெண்கள் மதரஸாவின் 20-வது ஆலிமா பட்டமளிப்பு விழா



அல்லாஹ்வின் மிகப்பெரும் கிருபையால்  கோபாலப்பட்டினத்தில் ரஹ்மானியா குர்ஆன் மதரஸாவின் ஆண்டு விழா & ரஹ்மானியா பெண்கள் மதரஸாவின் 20வது ஆலிமா பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.

முதல் நாள் அமர்வு:

25-04-2019 வியாழக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 6.00மணி வரை ரஹ்மானியா குர்ஆன் மதரஸாவில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.





அதைத் தொடர்ந்து மஃரிப் தொழுகைக்கு பிறகு இஷா தொழுகை முன்பு வரை மௌலவி அல்ஹாபிழ் அல்ஹாஜ். H.A அஹமது அப்துல்காதிர் சித்தீகி மஹ்ழரி ஹஜ்ரத்  (நிறுவனர் முஅஸ்ஸருர்ரஹ்மான் மகளிர் அரபிக்கல்லூரி,காயல்பட்டினம் )அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.

அத்துடன் முதல் நாள் அமர்வு நிறைவு பெற்றது.

இரண்டாம் நாள் அமர்வு:

26-04-2019  வெள்ளி கிழமை காலை 9.00 மணி முதல் 11.30 மணி வரை மாணவர்களுக்கான பயான் போட்டியும் அதனை தொடர்ந்து  மதியம் 1.10 வரை ஆலிமா பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியும் நடைபெற்றது. 

இதில் ஒன்பது ஆலிமாக்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. 

சிறப்புரை &ஸனது வழங்கியவர்கள்:
மௌலானா மௌலவி அல்ஹாஜ்   S.அப்துல் ஜப்பார் பாக்கவி ஹஜ்ரத் (முதல்வர் ஹிக்மதும் பாலிஃகா &தைய்யிபா
அரபிக் கல்லூரி,புதுக்கோட்டை  )

பிறகு மதியம் 2.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை மாணவர்களுக்கான பயான் போட்டி நடைபெற்றது.







இறுதியாக மஃரிப் தொழுகைக்கு பிறகு இரவு 9.15  வரை  பட்டிமன்றமும் மற்றும் பரிசளிப்பு விழா நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது.

பட்டிமன்றம் தலைப்பு :

சமுதாய மகிழ்ச்சிக்கு பெரிதும் காரணம்
குணநலமா? பணபலமா?

இத்தழைப்பின் கீழ் குணநலமே என்று மூன்று மாணவிகளும் பணபலமே என்று மூன்று மாணவர்களும் அவர்களின் கருத்துக்களை முன்வைத்தவனர்.

சுவாரசியமாக நடைபெற்ற பட்டிமன்றத்தின் இறுதியில் "சமுதாய மகிழ்ச்சிக்கு பெரிதும் காரணம் குணநலமே" என்று பட்டிமன்ற நடுவர் மௌலவி அல்ஹாபிழ் அல்ஹாஜ் K.M.ஷாகுல் ஹமீத் பாகவி ஹஜ்ரத் அவர்கள் (தலைமை இமாம் ஜாமிஆ மஸ்ஜித் &முதல்வர்,அன்னை பாத்திமா மகளிர் அரபிக் கல்லூரி,தோப்புத்துரை)
தீர்ப்பு வழங்கினார்கள்.

அதன் பிறகு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது இறுதியாக நன்றியுரை
ஜனாப் SRMJ.முஹம்மது பிர்தௌஸ்M.A, M.Phil,அவர்கள் (கோபாலபட்டினம்) நிகழ்த்தினார்கள்.

அல்லாஹ்வின் உதவியால் இரண்டு நாள் நிகழ்வு சிறப்பாக முடிந்தது.
அல்ஹம்து லில்லாஹ்

தகவல் &  GPM MEDIA செய்திகளுக்காக : உஸ்மான் ஆலிம் அவர்கள்

Post a Comment

0 Comments