கோபாலப்பட்டினம் GPM பொது நல சேவை சங்கம் சார்பில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரின் முடிவுகள் !!



கோபாலப்பட்டினம் GPM பொது நல சேவை சங்கம் சார்பில் நடைபெற்ற மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி  23/04/2019 மற்றும் 24/04/2019 இரு தினங்கள் கோபாலப்பட்டினம் கீரின் பார்க் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் மொத்தம் 24 அணிகள் கலந்து கொண்டனர்.  ரவுன் ராபின் முறையில் போட்டி நடைபெற்றது.

முதல் நாளில் முதல் தகுதி சுற்று மற்றும் இரண்டாம் தகுதி சுற்று நடைபெற்றது.

இறுதி நாளில் மூன்றாவது தகுதி சுற்று மற்றும் காலிறுதி, அரையிறுதி, இறுதி போட்டி நடைபெற்றது.

இதில் கோபாலப்பட்டினம் அணிகள் உட்பட பல அணிகள் கலந்து கொண்டனர்.

இதில் கோட்டைப்பட்டினம் DSP சிவராமன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அரைஇறுதி மற்றும் இறுதி போட்டிகளை தொடங்கி வைத்தார்கள்.




இதில் முதல் பரிசை  நேமத்தான்பட்டி அணியும்,  இரண்டாவது பரிசை  கோபாலப்பட்டினம் பொது நல சேவை சங்கம் அணியும், மற்றும் மூன்றாவது பரிசை  தேவகோட்டை அணியும் வெற்றி பெற்றனர்.

இந்த பரிசளிப்பு விழாவில் GPM பொது நல சேவை சங்கம் நிர்வாகிகள்,  கோபாலப்பட்டிணம் பொதுமக்கள், கோபாலப்பட்டிணம் கிரிக்கெட் அணிகள், மற்றும் சுற்றுவட்டார கிரிக்கெட் அணிகள் கலந்து கொண்டனர்.

தகவல் &  மீடியா செய்திகளுக்காக : GPM பொது நல சேவை சங்கம் நிர்வாகிகள்

Post a Comment

0 Comments