ஹஜ் 2026: விருப்பமான விமானத்தைத் தேர்ந்தெடுக்க தமிழக ஹஜ் கமிட்டி முக்கிய அறிவிப்பு!



தமிழ்நாடு மாநில ஹஜ் கமிட்டி மூலம் 2026-ஆம் ஆண்டு ஹஜ் பயணத்திற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள பயணிகள், தங்களுக்கு விருப்பமான விமானங்களை முன்பதிவு செய்து கொள்வதற்கான புதிய வசதியை இந்திய ஹஜ் கமிட்டி அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மாநில ஹஜ் கமிட்டித் தலைவர் பி. அப்துல் சமது MLA வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

முன்பதிவு முறை
ஹஜ் பயணத்திற்குத் தயாராக உள்ள ஹஜிகள், மும்பையில் உள்ள இந்திய ஹஜ் கமிட்டியின் அதிகாரப்பூர்வ இணையதளம் www.hajcommittee.gov.in அல்லது 'Haj Suvidha' செயலி (App) வழியாக ஆன்லைனில் தங்களுக்கு விருப்பமான விமானத்தைத் தேர்ந்தெடுத்து முன்பதிவு செய்து கொள்ளலாம்.

காலக்கெடு
இந்த விமான முன்பதிவு வசதி மிகக் குறுகிய காலத்திற்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
ஆரம்ப நாள்: 29.01.2026
இறுதி நாள்: 01.02.2026
இந்த நான்கு நாட்களுக்குள் பயணிகள் தங்களுக்கான விமானத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.

குறிப்பு
மேற்கண்ட தேதிகளுக்குள் விமானத்தைத் தேர்வு செய்யாத பயணிகளுக்கு, மும்பையில் உள்ள இந்திய ஹஜ் கமிட்டி முடிவு செய்யும் விமானத்தின் மூலமாகவே பயணம் மேற்கொள்ளும் நிலை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஹஜ் பயணிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி உரிய காலத்திற்குள் தங்களுக்கு விருப்பமான விமானத்தை முன்பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments