புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் பள்ளத்திவயலை சேர்ந்தவர் உடையப்பன் (50) மூச்சு திணறல் காரணமாக அவதிப்பட்ட இவர் கடந்த மாதம் 28ம் தேதி சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அப்போது அவருக்கு எக்ஸ்ரே மற்றும் சிடி ஸ்கேன் கொண்டு பரிசோதித்தபோது நெஞ்சு பகுதிக்குள் ஒரு கட்டி மூச்சு குழாயை அழுத்தியிருப்பது தெரியவந்தது. அதனால் படுத்த நிலையில் நோயாளிக்கு அதிகமான மூச்சு திணறல் ஏற்பட்டது. எனவே அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவது என்று டாக்டர்கள் முடிவு செய்தனர்.
அதன்படி மயக்க மருந்து மருத்துவரும் மருத்துவமனையின் முதல்வருமான மீனாட்சி சுந்தரம் தலைமையில் தலைமை இருதய அறுவை சிகிச்சை நிபுணர் தினேஷ், புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் பாரதிராஜா, தலைமை மயக்க மருத்துவர் ரவிக்குமார், உதவி மருத்துவர் அறிவரசன் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த 9ம் தேதி அறுவை சிகிச்சை மூலம் கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டது. தற்போது நோயாளி நலமாக இருக்கிறார். இன்னும் 3 நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யபடவுள்ளார்.
இதுகுறித்து மருத்துவமனை முதல்வர் மீனாட்சி சுந்தரம் கூறியதாவது:
மருத்துவமனையில் நோயாளி அனுமதிக்கப்படுவதற்கு முன்பாக மூச்சு திணறல் இருந்த காரணத்தால் ஆஸ்துமா நோய் என நினைத்து சிகிச்சை மேற்கொண்டு வந்தார். ஆனால் ஸ்கேன் மற்றும் மூச்சு குழாய் உதவியுடன் பரிசோதித்தபோது வெளிபுறம் ஒரு கட்டி மூச்சுக்குழாயை அழுத்தி கொண்டிருப்பது கண்டறியப்பட்டது. இதை அகற்ற வேண்டுமானால் வலதுபக்க நுரையீரல் இயங்காமல் தளர்ச்சியாக இருக்க வேண்டும். அப்போது உடலின் இயக்கத்துக்கான ஆக்ஸிஜன் செலுத்துவது சவாலாக இருக்கும். இந்நிலையில் மூச்சுக்குழாயில் இரு துவாரம் உள்ள ஒரு நவீன செயற்கை குழாயை பொருத்தி அறுவை சிகிச்சையின்போது இடதுபக்க நுரையீரல் மட்டுமே இயங்க செய்தோம். அதனால் அறுவை சிகிச்சை எளிதாக செய்ய முடிந்தது. அறுவை சிகிச்சைக்கு பின் 2 நுரையீரலையும் இயல்பான நிலையில் இயங்க வைத்தோம். தனியார் மருத்துவமனைகளில் இந்த சிகிச்சைக்கு ரூ.2 லட்சம் வரை செலவாகும் என்றார்.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.