கோபாலப்பட்டினம் GPM பைத்துல்மால் மூலம் 100 பயனாளிகளுக்கு நிதி உதவி



புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் வட்டம், மீமிசலை அடுத்த கோபாலப்பட்டினத்தில்GPM பைத்துல்மால் சேவை அமைப்பின் சார்பில் ஏழை,  எளிய,  நலிவடைந்தோர் பயனுறும் வகையில் வட்டியில்லா நகைக் கடன் வழங்கல், கைவிடப்பட்ட முதியோர்கள், விதவைகள் ஆகியோருக்கு மாதாந்திர பென்ஷன் உதவித் தொகை வழங்கல், திருமணமாகாத ஏழைப் பெண்களுக்கு திருமண நிதி உதவி வழங்கல், வறிய மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை, மருத்துவ உதவி வழங்கல் ஆகிய நலத் திட்ட உதவிகள்  செயல்படுத்தப்பட்டு வருகிறது.


அதன் ஒரு பகுதியாக, நோன்பு பெருநாளை முன்னிட்டு, கோபாலப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த நலிவடைந்த ஏழை, எளிய குடும்பங்களுக்கு ரூ. 300 வீதம் கடந்த 06/06/2019 வியாழக்கிழமை வழங்கப்பட்டது.  இந்த நிகழ்ச்சியில், கணவரால் கைவிடப்பட்டோர்,  விதவை,  முதியோர், மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 100 ஏழை குடும்பங்களுக்கு மொத்தம் ரூ.30,000 ஆயிரம் மதிப்பில் GPM பைத்துல்மால் அமைப்பின் தலைவர் ஹாஜி. வருசை முஹம்மது, செயலர் ஹாஜி முஹம்மது காசிம், பொருளாளர் ஹபீப் முஹம்மது ஆலிம் மற்றும் நிர்வாகிகள் விநியோகித்தனர்.







மேலும் இந்த நிகழ்வில் GPM மைதாங்கரை இறுதி வீடு வாட்ஸ்ஆப் குழுமம் உறுப்பினர்கள், டீ கடை பென்ச் வாட்ஸ்ஆப் குழுமம் உறுப்பினர்கள், GPM மக்கள் மேடை உறுப்பினர்கள், GPM மீடியா குழு உறுப்பினர்கள் மற்றும் ஊர் பெரியோர்கள் கலந்து கொண்டு பயனாளிக்கு நிதி உதவி வழங்கினார்.

தகவல் & GPM MEDIA செய்திகளுக்காக : சகோதரர் முனோஃபர்

Post a Comment

0 Comments