ரேஷனில் குறைபாடுகளா? கிராமசபையில் தெரிவிக்கலாம் கலெக்டர் தகவல்



புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று சுதந்திர தினத்தன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளது.
இந்த கிராம சபை கூட்டத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் உள்ள முன்னுரிமை குடும்ப அட்டை பயனாளிகளின் பட்டியல் மற்றும் ரேஷன் கடைகளின் கணக்குகளும் சமூக தணிக்கைக்கு வைக்கப்பட உள்ளது. எனவே மேற்படி கிராமசபை கூட்டங்களில் பொதுமக்கள் கலந்துகொண்டு பொது விநியோக திட்ட செயல்பாடுகள் தொடர்பான தங்கள் கருத்துக்களையும், குறைகளையும் தெரிவிக்கலாம் என கலெக்டர் உமாமகேஸ்வரி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments