ஆவுடையார்கோவில் தாலுகாவில் பணிபுரிந்து வரும் வருவாய் ஆய்வாளர் ஒருவர் தொடர்ந்து பல கிராம நிர்வாக அலுவலர்களிடம் வாக்குவாதம் செய்து வருவதோடு, கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தெரியாமல் கிராமக்கணக்குகளை எடுத்து வரச்சொல்லி கிராம உதவியாளர்களை மிரட்டி நில அளவைப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார். கிராம நிர்வாக அலுவலர்கள் முறையாக சங்க பிரதிநிதிகளுடன் ஆவுடையார்கோவில் தாசில்தாரிடம் முறையிட்டதற்கு, சங்கம் தீர்மானம் எப்படி இயற்றலாம் என அநாகரிகமான முறையில் நடந்துகொண்டதோடு வருவாய் ஆய்வாளர் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். எனவே கிராம நிர்வாக அலுவலர்களுடன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வரும் வருவாய் ஆய்வாளரை உடனடியாக பணிமாற்றம் செய்தும், வருவாய் ஆய்வாளருக்கு ஆதரவாக தமது கடமையை செய்ய தவறியதோடு ஊழியர் விரோதப்போக்கில் ஈடுபட்டு வரும் தாசில்தாரை இடமாற்றம் செய்ய கோரி அனைத்து பணிகளையும் புறக்கணித்து ஆவுடையார்கோவில் தாலுகா அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆவுடையார்கோவில் வட்ட கிளையின் சார்பில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.