புதுக்கோட்டை மாவட்டம் குளமங்கலம் கிராமத்தில் தாங்கள் படித்த அரசுப் பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் இணைந்து ரூ. 3 லட்சம் செலவில் விழா மேடை அமைத்துக் கொடுத்தனர்



புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகிலுள்ள குளமங்கலம் வடக்கு அரசுப் பள்ளிக்கு,  இங்கு பயின்ற முன்னாள் மாணவர்கள் ரூ.3 லட்சத்தில் விழா மேடை அமைத்து கொடுத்துள்ளனர்.

குளமங்கலம் வடக்கு கிராமத்திலுள்ளஅரசு உயர்நிலைப் பள்ளியில் குளமங்கலம் தெற்கு, திருநாளூர் உள்ளிட்ட  பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

தொடர்ந்து பொதுத் தேர்வுகளில் இப்பள்ளி நூறு சதவிகிதத் தேர்ச்சியை பெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பள்ளியில் நடத்தப்பட்டு வரும் ஆண்டு விழாவுக்கு மேடை இல்லாததால், தரையில் கொட்டகை அமைத்து பயன்படுத்தி வந்தனர்.

 இந்நிலையில் முன்னாள் மாணவர்கள் சிலர் ஒன்று சேர்ந்து, தாங்கள் படித்த பள்ளிக்கு சொந்த செலவில் விழா மேடை அமைப்பது என முடிவெடுத்தனர். இதைத்தொடர்ந்து, ரூ. 3 லட்சத்தில்  விழா மேடை கட்டுமானப் பணி தொடங்கப்பட்டு, அண்மையில் நிறைவு பெற்றன.


இதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை மாலை பள்ளித் தலைமையாசிரியர் ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்ற விழாவில், அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலர் திராவிடச்செல்வத்திடம் விழா மேடையை முன்னாள் மாணவர்கள் அர்ப்பணித்தனர். தொடர்ந்து, மாணவர்களின்  கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Post a Comment

0 Comments