காரைக்குடியிலிருந்து அறந்தாங்கி வழியாக சென்னைக்கு ரயில் இயக்க கோரிக்கை



காரைக்குடியிலிருந்து திருவாரூர் வரையிலான அகல ரயில் பாதையில் அறந்தாங்கி மார்க்கமாக மீண்டும் சென்னை வரை விரைவு ரயிலை இயக்க வேண்டும் என்று மாநிலங்களவை உறுப்பினரும், திருச்சி ரயில்வே கோட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலைவருமான திருச்சி
என். சிவாவிடம் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது.


அறந்தாங்கி வர்த்தக சங்கத்தின் தûலைவர் பா.வரதராஜன், அறந்தாங்கி ரயில் பயணிகள் நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.ஆர். ஸ்ரீதர் மற்றும் செயலாளர் வி.சி.செல்வம் உள்ளிட்டோர் திருச்சி சிவாவிடம் நேரில் மனு அளித்தனர்.

மனுவில் ஏற்கெனவே இதே மார்க்கத்தில் இயங்கி வந்த இராமேஸ்வரம் முதல் காரைக்குடி வழியாக சென்னைக்கு சென்ற ரயிலை விரைவில் இயக்க வேண்டும், அதை மானாமதுரையிலிருந்து தொடர் இணைப்பாக மதுரை வரை இயக்க வேண்டும், மேலும் தினமும் இரண்டு முறை சென்று வந்த கம்பன் விரைவு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும், அறந்தாங்கி ரயில் நிலையித்தில் பயணசீட்டு கணினி மையம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

 மனுவை பெற்றுக்கொண்ட திருச்சி சிவா, ரயில்வே துறை உயரதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Post a Comment

0 Comments