கோட்டைப்பட்டிணத்தில் தமிழ்நாடு மீன்வள துறையின் சார்பாக கடற்படை வேலை வாய்ப்பு முகாம்புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினத்தில் தமிழ்நாடு மீன்வள துறையின் சார்பாக நாளை 13.09.2019 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் கோட்டைப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பேரிடர் மீட்பு மையம் கட்டிடத்தில் இந்திய கடற்படைக்கு (Indian Navy) ஆட்கள் எடுக்கும் பணி நடைபெறவிருக்கிறது.
எனவே குறிப்பாக கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்திருக்க கூடிய கட்டுமாவடி முதல் முத்துக்குடா வரை உள்ள மீனவ குடும்பத்தை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட  இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கல்வித்தகுதி:
10-ஆம் வகுப்பு அல்லது ஏதாவது டிகிரி முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு:
25 வயதுக்கு உட்பட்ட இளைஞராக இருத்தல் வேண்டும்.

இடம்:
கோட்டைப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பேரிடர் மீட்பு மையம்.

தகவல்: 
ஜிம் சரீப் அப்துல்லா (தலைவர்)
பெற்றோர் ஆசிரியர் கழகம் அரசு மேல்நிலைப்பள்ளி,
கூட்டுறவு வங்கி இயக்குனர்,
முஸ்லீம் ஜமாத் (வக்ஃபு) நிர்வாகி,
கோட்டைப்பட்டினம்,

Post a Comment

0 Comments