புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் வட்டம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி R.புதுப்பட்டிணம் மீனவர் குடியிருப்பில் நாளை 13.09.2019 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் ஊட்டச்சத்து இயக்கம் சார்பாக சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறவிருக்கிறது.
சிறப்பு கிராமசபை கூட்டத்தின் சிறப்பம்சம்:-
நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கீழ் உள்ள ஊர்கள்:
சிறப்பு கிராமசபை கூட்டத்தின் சிறப்பம்சம்:-
- நமது கிராமப் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளின் ஊட்டச்சத்தை நிலைநாட்டல்.
- அங்கன்வாடி மையங்களில் BABY FRIENDLY TOILET இருப்பதை உறுதி செய்தல்.
- ஆபத்து நிலையில் உள்ள அங்கன்வாடி மையங்களை உடனடியாக புனரமைத்தல்.
- ஊராட்சி ஒன்றிய பள்ளிக் கட்டிடங்கள் குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை வசதி உறுதி செய்தல்.
- அங்கன்வாடி மையங்களில் குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை வசதி உள்ளதை உறுதி செய்தல்.
- தனி நபர் சுகாதாரம் காத்திட, சாப்பாட்டிற்கு முன்பும், பிறகும், கைகளை கழுவி, சுத்தம் செய்வதன் அவசியம் குறித்து, பொதுமக்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகளிடம், விழிப்புணர்வு ஏற்படுத்தல்.
அதுசமயம் அந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கோபாலப்பட்டினம் மற்றும் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்கள் பகுதிகளில் இருக்கும் அங்கன்வாடி மையங்களில் உள்ள குறைகளை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கீழ் உள்ள ஊர்கள்:
- கோபாலப்பட்டிணம்
- கணபதிப்பட்டிணம்
- குறிச்சிவயல்
- முத்துக்குடா(மீனவர்)
- நாட்டாணி
- ஆர்.புதுப்பட்டிணம்(மீனவர்)
- ஆர்.புதுப்பட்டிணம்(முஸ்லிம்)
- முத்துக்குடா(முஸ்லிம்)
- அண்டியப்பன்காடு
- கூடலூர்
- பாதரக்குடி
- புரசகுடி
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.