சவுதி அரேபியாவில் பேருந்து விபத்து- வெளிநாட்டினர் 35 பேர் பலியனதாக தகவல்




சவுதி அரேபியாவில் பேருந்து விபத்துக்குள்ளானதில் வெளிநாட்டைச் சேர்ந்த 35 பேர் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சவுதி அரேபியாவின் மதினா அருகே வெளிநாட்டினர் சென்று கொண்டிருந்த பேருந்து, எக்ஸ்வேட்டர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த வெளிநாட்டினர் 35 பேர் பலியானதாக உள்ளூர் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. 


மதினா நகரில் இருந்து மெக்காவை இணைக்கும் சாலையில் இந்த விபத்து நடைபெற்றதாகவும், விபத்தில்  காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.  விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments