போதைப்பொருட்களை முழுமையாக தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இன்றைய இளைஞர்களை வெகுவாக மழுங்கடித்து கொண்டிருக்கும் போதைப் பொருட்களை தடுக்க தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பல்வேறு போதைப் பொருட்களால் தொடர்ந்து அடுக்கடுக்காக மரணங்களும், விபத்துகளும், பல்வேறு சமூக தீங்குகளும் நடந்து கொண்டிருக்கின்றன.

அதனை பயன்படுத்துபவர்கள் மட்டுமல்லாது அவர்களது குடும்பம், பகுதி, மாவட்டம் என நம் நாட்டின் வளர்ச்சிக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கின்றது.

அடுத்த தலைமுறையின் வளர்ச்சிக்கு  முட்டுக்கட்டையாய் திகழ்வது பெரும் வருத்தத்திற்குரியது.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கப்பலடி கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த இளைஞரை கைது செய்து இருக்கின்றனர்.

சப் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையில் போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து இருக்கின்றார்கள்.
சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினருக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதுபோன்று விரைந்து செயல்பட்டு கடும் நடவடிக்கைகளை எடுத்து போதைப் பொருட்கள் பயன் படுத்துபவர்கள், விற்பவர்கள்  என அனைவரும் தடுக்கப்படவேண்டும், கண்டிக்கப்பட வேண்டும்.

போதைப் பொருட்களிடமிருந்து மக்களைப் பாதுகாக்க அரசு கவனம் செலுத்த வேண்டும் .

இதனால் ஏற்படும் தீங்கினை கருத்தில் கொண்டு, இளைஞர்கள் தங்களின் பொறுப்புணர்வுகளை உணர்ந்து இதிலிருந்து மீண்டு வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

  -கே.நவாஸ் கனி
    இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்,

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments