தீயத்தூரில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு: 5-ஆம் ஆண்டு நினைவு நாளில் மரக்கன்றுகள் வழங்கல்



புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே உள்ள தீயத்தூரில், மறைந்த தொழிலதிபர் M. காளிமுத்து அவர்களின் 5-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நலத்திட்டங்கள்
தீயத்தூர் MK அறக்கட்டளை மற்றும் அமரடக்கி புன்னகை அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அன்னதானம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பசுமையை மேம்படுத்தும் நோக்கில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா மூன்று மரக்கன்றுகள் வீதம் வழங்கப்பட்டன. இந்த மரக்கன்றுகள் வழங்கும் திட்டத்தை அம்மையார் திருமதி. கா. அஞ்சம்மாள் அவர்கள் தொடங்கி வைத்தார்.

தலைமை
இந்நிகழ்விற்கு தீயத்தூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் திரு. கே. சுப்பிரமணியன், தொழிலதிபர் திரு. கே. குமார் மற்றும் திரு. கே. அய்யப்பன் ஆகியோர் தலைமை தாங்கினர். புன்னகை அறக்கட்டளை நிறுவனத் தலைவர் திரு. ஆ.சே. கலைபிரபு முன்னிலை வகித்து நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார்.

மஞ்சப்பை விழிப்புணர்வு
இதனைத் தொடர்ந்து தீயத்தூர் வாரச்சந்தைக்கு வந்த பொதுமக்களிடம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. "நெகிழி (பிளாஸ்டிக்) தவிர்ப்போம், மீண்டும் மஞ்சப்பைக்கு மாறுவோம்" என்ற முழக்கத்துடன், கடைக்குச் செல்லும் போது துணிப்பைகளைப் பயன்படுத்துவதன் அவசியத்தை நிர்வாகிகள் வலியுறுத்தினர். வழங்கப்பட்ட மரக்கன்றுகளைப் பாதுகாப்பாக வளர்த்து சுற்றுச்சூழலைக் காக்க வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

பங்கேற்பாளர்கள்
நிகழ்ச்சியில் M. மாரிமுத்து, கே. ஜோதி லெட்சுமி, கே. செல்வமணி, பொன்பேத்தி மதிமூனிஷ் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments