அன்பான கோபாலபட்டிணம் உறவுகளுக்கு ஓர் அன்பு கட்டளை மற்றும் முக்கிய அறிவிப்பு..!கிழக்கு கடற்கரை சாலை ( ECR ) பகுதியில் இயற்கை மற்றும் சுகாதாரம் சூழ்ந்த எழில்மிகு அழகிய கிராமமாக நம்ம ஊர் கோபாலப்பட்டிணம் காட்சியளித்து வருகிறது.
ஆனால் சில மாதங்களாக குப்பை மற்றும் கழிவுநீர் சூழ்ந்து சுகாதாரமற்ற நிலையில் காட்சியளித்தது.

கடந்த மூன்று நாளைக்கு முன்னர் ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் அனைத்து குப்பைகள் மற்றும் கழிவுநீர் செல்லக்கூடிய கழிவுநீர் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு சுகாதாரம் சூழ்ந்த எழில்மிகு அழகிய கிராமமாக மாற்றியுள்ளார்கள்.

அன்பு கட்டளை:

குப்பை மற்றும் கூளங்களை கொட்ட செல்லும் தாய்மார்கள், தந்தைமார்கள், சகோதரிகள் மற்றும் இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்று கொட்டக் கூடிய அண்ணன்மார்கள், தம்பிமார்களே தயவு செய்து குப்பைகளை குப்பைத் தொட்டியின் வெளியே வீசி விட்டு செல்லாமல், வண்டியை விட்டு இறங்கி சென்று குப்பைகளை சேகரிப்பதற்காக வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிக்குள் தயவு கூர்ந்து குப்பைகளை கொட்டவும்..

நமது ஊர் மக்களின் கோரிக்கையை ஏற்று ஊராட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்றி தந்துள்ளார்கள். மேலும் தினமும் குப்பைகள் அகற்றப்படும் என்று வாக்குறுதியையும் அளித்துள்ளார்கள். எனவே அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் விதமாகவும் நமது பகுதியை நாம் தான் சுத்தமாக வைத்திருக்க முடியும் என்ற உயர்ந்த நோக்குடன் பொதுமக்களாகிய நாம் உறுதிமொழி எடுத்துக்கொண்டு நமது சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டுகிறோம்.

ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஊர் ஜமாத்தின் அறிவிப்பு:

கோபாலப்பட்டிணம் பகுதி மக்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகளில் குப்பைகளை கொட்டும்படி ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஊர் ஜமாத் சார்பாக கேட்டுக் கொள்கிறோம். அவ்வாறாக இல்லாமல் குப்பைகளை குப்பை தொட்டியின் வெளியே வீசி விட்டு செல்லும் நபர்களை தகுந்த ஆதாரத்துடன் அடையாளம் காணப்பட்டால் அவர்கள் மீது ஊராட்சி நிர்வாகம் மூலம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

நமதூரை சேர்ந்த வெளிநாடு வாழ், வெளியூர் வாழ் மற்றும் உள்ளூர் வாழ் சகோதரர்கள் தங்கள் குடும்ப உறவுகளிடம் இந்த செய்தியை பகிர்ந்து அறிவுரைகள் வழங்கவும் கேட்டுக்கொள்கிறோம்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments