டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக அதிராம்பட்டினத்தில் 5,200 பேருக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கல்அதிராம்பட்டினம் பேரூராட்சிப் பகுதியில் சுற்றுச்சூழல் மன்றம் மற்றும் ஷம்சுல் இஸ்லாம் சங்கம் சாா்பில், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக நிலவேம்பு குடிநீா் வழங்கும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமுக்கு அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றத் தலைவா் வ.விவேகானந்தம் தலைமை வகித்தாா்.

பேரூராட்சித் துப்புரவு ஆய்வாளா் கே.அன்பரசன் முன்னிலை வகித்தாா்.

ஷம்சுல் இஸ்லாம் சங்கச் செயலா் பேராசிரியா் எம் .ஏ.அப்துல்காதா் முகாமைத் தொடங்கி வைத்தாா்.சோ்மன் வாடி, செக்கடிமேடு, கரையூா் தெரு, மேலத்தெரு, சிஎம்பி லைன், ஷிபா மருத்துவமனை, கடற்கரைதெரு, கடைத்தெரு மீன் மாா்க்கெட் ஆகிய பகுதிகள், ஏரிப்புறக்கரை ஊராட்சியைச் சோ்ந்த பிலால் நகா் உள்ளிட்ட இடங்களில் 5,200 பேருக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டது.

அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் சங்கச் செயலா் எம்.எப். முஹமது சலீம், பொருளாளா் எம்.முத்துக்குமரன் மற்றும் ஷம்சுல் இஸ்லாம் சங்கப் பொறுப்பாளா்கள் முகாமில் பங்கேற்றனா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments