தேவிபட்டினத்தில், கடலுக்கு செல்லும் மழைநீரை மோட்டார் மூலம் ஊருணியில் நிரப்பும் இளைஞர்கள்கடலுக்கு வீணாக செல்லும் தண்ணீரை ஊருணிக்கு திருப்பி விடும் இளைஞர்களுக்கு பாராட்டு குவிகிறது.

தேவிபட்டினத்தில் கிழக்கு கடற்கரை சாலை அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தின் எதிரே மரைக்காயர் ஊருணி உள்ளது. இந்த ஊருணி தண்ணீரை தேவிபட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக மழை பெய்யாமல் இந்த ஊருணி வறண்டு காணப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இந்த பகுதியில் பரவலாக மழை பெய்ததை தொடர்ந்து நீர் நிலைகளிலும், தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மேலும் வயல்வெளிகளில் அதிகளவு தண்ணீர் நிற்பதால் அதனை விவசாயிகள் பூவோடை வழியாக திறந்து விட்டுள்ளனர். இந்த தண்ணீர் அனைத்தும் கால்வாய் வழியாக கடலுக்கு வீணாக சென்று கலக்கிறது.

இதனையறிந்த தேவிபட்டினம் துவா அமைப்பினர் அதன் ஒருங்கிணைப்பாளர் உபயதுல்லா தலைமையில் கடலுக்கு வீணாக செல்லும் தண்ணீரை டீசல் மோட்டார் மூலம் மரைக்காயர் ஊருணிக்கு திருப்பி விடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் தற்போது மரைக்காயர் ஊருணி வேகமாக நிரம்பி வருகிறது.

பொதுநலன் கருதி செயல்படும் இந்த அமைப்பினரை தேவிபட்டினம் பகுதி மக்கள் மட்டுமின்றி சுற்று வட்டார கிராம மக்களும் பாராட்டினர். பாராட்டு குவியும் வேளையில், இதேபோல மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வீணாகும் தண்ணீரை அருகில் உள்ள நீர்நிலைகளில் சேகரிக்க இளைஞர்கள் முன்வர வேண்டும் என்றும் அனைத்து தரப்பினரும் விரும்புகின்றனர்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments