மீமிசல் தபால் நிலையத்தில் பிப்.2 முதல் மீண்டும் ஆதார் சேவை!



மீமிசல் தபால் நிலையத்தில் கடந்த சில ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த ஆதார் சேவை, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மீண்டும் வருகிற பிப்ரவரி 2-ம் தேதி (02-02-2026) முதல் தொடங்கப்பட உள்ளது.

இப்பகுதியில் உள்ள தபால் நிலையத்தில் ஏற்கனவே ஆதார் அட்டை எடுக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. ஆனால், சில தொழில்நுட்ப மற்றும் நிர்வாகக் காரணங்களால் கடந்த சில ஆண்டுகளாக இந்தச் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் இப்பகுதி மக்கள் ஆதார் தொடர்பான பணிகளுக்காகப் பல கிலோமீட்டர் தொலைவில் உள்ள மற்ற மையங்களுக்குச் சென்று வர வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர்.

தற்போது மீண்டும் இச்சேவை தொடங்கப்பட உள்ளதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பிப்ரவரி 2 முதல் பொதுமக்கள் தங்கள் புதிய ஆதார் அட்டை விண்ணப்பங்கள், முகவரி மாற்றம், பெயர் திருத்தம், செல்போன் எண் இணைத்தல் மற்றும் சிறுவர்களுக்கான கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல் போன்ற அனைத்துப் பணிகளையும் இங்கேயே மேற்கொண்டு பயன் பெறலாம்.

ஆதார் சேவை பெற வருபவர்கள் உரிய அசல் ஆவணங்களுடன் (Original Documents) தபால் நிலையத்தை அணுகுமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த அரிய வாய்ப்பை மீமிசல் பகுதி பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தகவல்: கேப்டன் யூசுப்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments