கோபாலப்பட்டிணத்தில் கொட்டி தீர்த்த மழை.!!!புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகாமையில் உள்ள கோபாலப்பட்டிணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (14.11.2019) காலை சுமார் அரை மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் .

கோபாலப்பட்டிணத்தில் கடந்த சில நாட்களாக மழை இல்லாமல் வறட்சி நிலையே காணப்பட்டது.

கடந்த மாதங்களுக்கு முன்பு வரை கோபாலப்பட்டிணம் மற்றும் சுற்றுவட்டார பகுதி முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வந்த நிலையில் ,

தற்போது கடந்த சில தினங்களாக பல ஆண்டுகளுக்கு பிறகு நல்ல கன மழை பெய்தது, மக்கள் பயன்பாட்டுக்குரிய குளங்கள் அனைத்தும் நிரம்பியது.

தற்போது கோபாலப்பட்டிணத்தில் வானம் மேகமூட்டத்துடனும், அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது.

இன்று பலத்த மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தாலும் பல இடங்களில் சாலைகளில் குளம் போல் தண்ணீர் தேங்கி கிடக்கின்றன. இதனால் நடந்து செல்வோர் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகிறார்கள்.

எனவே மழை நீர் தேங்காத அளவுக்கு ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

மழை பொழியும் போது என்ன செய்வது

மழை பெய்யும் போது ஓதுவதற்குறிய ஒரு துஆவை நபியவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள் அந்த துஆவை ஓதும் போது நாம் மழையின் மூலமாகவும் மறுமையில் நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

اَللّهُمَّ صَيِّبًا نَافِعًا

அல்லாஹும்ம ஸய்யிப(B]ன் நாபி[F]அன்

இதன் பொருள் : இறைவா! பயனுள்ள மழையாக இதை ஆக்கு!

(ஆதாரம்: புகாரி 1032)

மழை பொழிந்தபின் ஓதவேண்டிய துஆ..

مُطِرْنَا بِفَضْلِ اللهِ وَرَحْمَتِهِ

முதிர்னா பி ஃபள்லிலில்லாஹி வரஹ்மதிஹி

இதன் பொருள் : அல்லாஹ்வின் அருளினாலும், அவனது கிருபையினாலும் நம்மீது மழை பொழிந்தது.

ஆதாரம் : புகாரி, முஸ்லிம்புகைப்படங்கள் உதவி:  ரகுமான், சாகுல் ஹமீது

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments