மீமிசல் பாப்புலர் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தினவிழா..!புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் ஒன்றியம் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள மீமிசல் பாப்புலர் மெட்ரிக் பள்ளியில் 14.11.2019 வியாழக்கிழமை அன்று குழந்தைகள் தின விழா நடைபெற்றது.


புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் பாப்புலர் பள்ளியும், கிங்ஸ் ரோட்டரி கிளப்பும் இணைந்து குழந்தைகள் தின விழாவை பள்ளி வளாகத்தில் கொண்டாடினர்.


இவ்விழாவில் மீமிசல் கிங்ஸ் ரோட்டரி கிளப் தலைவர் Rtn. முஹம்மது யூசுப் மற்றும் செயலாளர் Rtn.அன்பழகன் தலைமை வகித்தனர்.

மேலும் இவ்விழாவிற்கு மீமிசல் கிங்ஸ் ரோட்டரி கிளப்பின் பட்டய தலைவர் Rtn. வீரதுரை மற்றும் முன்னாள் தலைவர் மலையாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

குழந்தைகள் தின விழாவையொட்டி பள்ளி குழந்தைகள் மாறு வேட போட்டி மற்றும் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

சிறப்பான முறையில் குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டு இனிப்புகள் மற்றும் போட்டிகளில் கலந்துகொண்ட குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

தகவல் : வாசிம்கான்

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments