கோபாலப்பட்டிணத்தில் சேறும், சகதியுமாக காட்சி தரும் தங்க மஹால் திருமண மண்டபம் - அரஃபா தெரு இணைப்பு சாலை



புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகாமையில் உள்ள கோபாலபட்டிணத்தில் மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக மிக மோசமாக காட்சி தரும் தங்க மஹால் திருமண மண்டபம் - அரஃபா தெரு இணைப்பு சாலை.
மீமிசல் அருகாமையில் உள்ள கோபாலப்பட்டிணத்தில் முக்கிய சாலையான காட்டுக்குளம் குளம் பள்ளிவாசல் - கரிக்கடை சந்திப்பு சாலை ஆகும். இந்த சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இரு சக்கர வாகனத்தில் பயணித்து வருகின்றனர்.

மேலும் கடந்த சில நாட்களாக கோபாலப்பட்டிணம் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் மக்கள் பயன்பாட்டுக்குரிய குளங்கள் அனைத்தும் நிரம்பியுள்ளன.

இந்த பகுதியில் காட்டுக்குளம் பல ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியதால் மக்கள் குளித்து வருகின்றனர். காட்டுக்குளத்திற்கு குளிக்க செல்லும் பெண்கள் மூன்று வழியை பயன்படுத்தி வருகின்றனர்.

இதில் முக்கியமான வழியாக தங்க மஹால் திருமண மண்டபம் சாலை இருக்கிறது. தங்க மஹால் திருமண மண்டபம் முன்பு திருமணங்கள் நடைபெற்றால் மட்டுமே அதிக மக்கள் வந்து செல்வது வழக்கம். ஆனால் தற்போது ரஹ்மானிய்யா பெண்கள் மதரஸா கட்டிடம் இடம் மாற்றம் செய்யப்பட்டு தங்க மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இதனால் RSM ரைஸ் மில் வழியாக மதரஸா செல்லக்கூடிய மாணவ,மாணவியர் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

எனவே சில மீட்டர் அளவே கொண்ட சேறும், சகதியுமாக இருக்கும் மண் சாலையை தற்போது அந்த வழியாக செல்லக்கூடிய அளவிற்கு கிராவல் கொண்டு உடனடியாக தற்காலிக சாலை அமைத்தும், நிரந்தரமாக சிமெண்ட் சாலை அமைத்து தர ஊராட்சி மன்ற தனி அலுவலர் அவர்கள் மேல்அதிகாரிகளின் கவனத்திற்கு கொன்று சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாக உள்ளது.

கடந்த சில தினங்களாக பெய்த மழையினால் சேறும், சகதியுமாக காட்சியளிக்கு மண் சாலை



கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments