புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணம் பகுதியைச் சேர்ந்த நண்பர்களான முகமது நசீம் (26), முகமது சாலிஹ் (27) ஆகிய இருவரும் இன்று காலை 10:30 மணியளவில் தங்களது இருசக்கர வாகனத்தில் கோபாலப்பட்டிணத்தில் இருந்து இராமநாதபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.
முகமது சாலிஹ்கிற்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் குழந்தை பிறந்துள்ளது. அந்தக் குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழ் வாங்குவதற்காகவே, தனது நண்பர் முகமது நசீமுடன் முகமது சாலிஹ் இராமநாதபுரம் நோக்கிச் சென்றுள்ளார்.
இவர்களது வாகனம் வட்டாணம் செக்போஸ்ட் அருகே சென்றபோது, தொண்டியிலிருந்து வெள்ளையபுரத்தை நோக்கி வந்த கார் எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது. இந்த பயங்கர விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, அங்கிருந்தவர்கள் காயமடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே முகமது நசீம் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், படுகாயமடைந்த முகமது சாலிஹ் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து தகவல் அறிந்த எஸ்.பி.பட்டினம் காவல் துறையினர், விபத்தை ஏற்படுத்திய தொண்டியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் ஜாஸ்வா (26) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தைக்கு சான்றிதழ் வாங்கச் சென்ற இடத்தில் நேர்ந்த இந்த சம்பவம், கோபாலப்பட்டிணம் பகுதியில் ஒட்டுமொத்த கிராம மக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
எங்களுடன் இணைந்திருங்கள்
எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.