ஏ.சி., ஃபிரிட்ஜ் மெக்கானிக் இலவச பயிற்சி.!அண்ணா பல்கலைக்கழகம்.! உடனே விண்ணப்பியுங்கள்..!



ஏழை, எளிய மாணவர்களுக்கு இலவசமாக ஏ.சி., ஃபிரிட்ஜ் மெக்கானிக் பயிற்சி அளிக்க அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழில்முனைவோர் மேம்பாட்டு மைய இயக்குநர் ஜி.ரவிக்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது,

அண்ணா பல்கலைக்கழக தொழில்முனைவோர் மேம்பாட்டு மையம் சார்பில் ஏ.சி. மற்றும் பிரிட்ஜ் ரிப்பேர் சர்வீசஸ் தொழில்நுட்ப பயிற்சி இலவசமாக அளிக்கப்பட உள்ளது. இந்த 6 மாத கால பயிற்சிக்கு ஆண்களும், பெண்களும் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். நேர்காணல் அடிப்படையில் மொத்தம் 50 பேர் பயிற்சிக்கு தேர்வுசெய்யப்படுவர். இப்பயிற்சி நவம்பர் மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நடைபெறும்.

பயிற்சி வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும். 

விண்ணப்பங்களை 22.11.2019 தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

கூடுதல் விவரங்களை தொழில்முனைவோர் மேம்பாட்டு மையம், சிபிடிஇ கட்டிட,ம்,. கிண்டி பொறியியல் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி, சென்னை 600 025 என்ற முகவரியை அணுகலாம்.

தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 044-22358601. செல்போன் எண் 98404-67267'' . இவ்வாறு அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழில்முனைவோர் மேம்பாட்டு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments