தமிழக அரசு சார்பில் நில அளவீடு பயிற்சி: உடனே விண்ணப்பியுங்கள்.!!



தமிழக நில அளவைத் துறையில் ஏராளமான காலிப் பணியிடங்கள் உள்ளன. இதற்காக தமிழக நில அளவை துறையின் சார்பில் நில அளவீடு செய்வதற்கான 3 மாதம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

தமிழக நில அளவை துறையின் சார்பில் நில அளவீடு செய்வதற்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க நவம்பர் 20 ஆம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக நில அளவைத் துறையில் ஏராளமான காலிப் பணியிடங்கள் உள்ளன. இதற்காக தமிழக நில அளவை துறையின் சார்பில் நில அளவீடு செய்வதற்கான 3 மாதம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. நில அளவை சிவில் பொறியியல் டிப்ளமோ முடித்தவர்களுக்கு, நில அளவீடு செய்வதற்கான உரிமம் வழங்கி, 20 ஆயிரம் ரூபாய் ஊதிய அடிப்படையில், அவர்களை பயன்படுத்திக்கொள்ள அரசு அறிவுறுத்தி உள்ளது.

கல்வித்தகுதி:

தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வித் துறையால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில், மூன்றாண்டு சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது:

விண்ணப்பதாரரின் வயது 50க்குள் இருக்க வேண்டும்.

பயிற்சிக் காலம் மற்றும் கட்டணம்:

இதற்கான பயிற்சிக் காலம் மூன்று மாதம். 30 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். பயிற்சியை நிறைவுற்ற பின்  நில அளவை செய்வதற்கான உரிமம் பெறலாம்.



கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments