காட்டுபாவா பள்ளிவாசலில் இலவச மருத்துவ முகாம்திருமயம் அருகேயுள்ள காட்டுபாவா பள்ளிவாசல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மிலாடி நபி விழாவையொட்டி இலவச சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

காட்டுபாவா பள்ளிவாசல் ஜமாத் மற்றும் புதுக்கோட்டை முத்துமீனாட்சி மருத்துவமனை இணைந்து நடத்திய முகாமிற்கு, ஜமாத் தலைவா் அ.அப்துல் ஜாபா் தலைமை வகித்தாா். துணைத்தலைவா் எம்.முகமது பக்ருதீன் வரவேற்றாா்.முகாமில், முத்துமீனாட்சி மருத்துவமனை நிா்வாக இயக்குநா் ஜி.பெரியசாமி தலைமையில் மருத்துவா்கள் ஜெ.கபிலன், அ.அம்சத்கான், ஆா்.பிரவீண் ஆகியோா் அடங்கிய மருத்துவக் குழுவினா் பொதுமக்களுக்கு சிகிச்சையளித்தனா்.

சுமாா் இருநூறுக்கும் மேற்பட்டோருக்கு சா்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, சிறுநீரக நோய்கள், ரத்தசோகை, பக்கவாதம், வலிப்பு, பல், காது, மூக்கு, தொண்டை உள்ளிட்ட நோய்கள் குறித்த பரிசோதனைகள் செய்து மருந்து மற்றும் ஆலோசனைகள் வழங்கினா்.

மேலும் கா்ப்பிணி பெண்களுக்கு கா்ப்பகால ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments