ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் விமான நிலையம் அமைக்க ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி எம்பி பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.
இது குறித்து பாராளுமன்றத்தில் எம்பி நவாஸ்கனி, ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்திற்கு நாடு முழுவதில் இருந்தும் மக்கள் அதிகப்படியாக வருகை தந்து கொண்டிருக்கின்றனர்.
மேலும் பல சுற்றுலா தளங்களும், புனிதத் தலங்களும் நிறைந்ததாக ராமநாதபுரம் காணப்படுகிறது. அதுமட்டுமல்லாது வணிக ரீதியாக இந்திய பொருளாதாரத்திற்கு ராமநாதபுரம் குறிப்பிடத்தக்க பங்கினை வகிக்கின்றது.
துபாய் , சவுதி அரேபியா , ஹாங்காங், சிங்கப்பூர், ஸ்ரீலங்கா போன்ற நாடுகளிடையேயான வணிக ரீதியான தொடர்பு கொண்ட மாவட்டமாக திகழ்கிறது.
பருத்தி, மிளகாய், கடல் உணவுகள் என பல வணிகங்களுக்கு முக்கிய பகுதியாக விளங்குகின்றது.
தற்போது மதுரை விமான நிலையத்தில் இருந்து ராமநாதபுரத்திற்கு 200 கிலோ மீட்டர் தொலைவு சாலை மார்க்கமாக பயணம் செய்ய வேண்டி இருக்கின்றது.
எனவே வணிகர்கள், சுற்றுலா பயணிகள், புனித யாத்திரைகள், மற்றும் தொகுதி மக்கள் பயன்பெறும் வண்ணம் (பிராந்திய விமான இணைப்பு திட்டம்) UDAN Scheme - மூலம் ராமநாதபுரத்தில் விமான நிலையம் அமைக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என மக்களவையில் எம்பி நவாஸ்கனி உரையாற்றினார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.