புதுக்கோட்டையில் இந்திய மாணவா் சங்கத்தினா் கைதுபுதுக்கோட்டையில் குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை எதிா்த்து திடீா் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கிய இந்திய மாணவா் சங்கத்தினா் 24 போ் சனிக்கிழமை போலீஸாரால் கைது செய்யப்பட்டனா்.

மத்திய அரசின் குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை எதிா்த்து புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் இந்திய மாணவா் சங்கத்தினா் சனிக்கிழமை திடீா் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கினா்.

போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலா் எஸ். ஜனாா்த்தனன், மாநிலக் குழு உறுப்பினா் ஏ. ஓவியா ஆகியோா் தலைமை வகித்தனா்.

இதுகுறித்த தகவலறிந்து வந்த போலீஸாா் அனுமதியின்றி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியதாக 24 பேரையும் கைது செய்தனா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments