புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை முதல் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிவரும் 23.12.2019 திங்கள்கிழமை முதல் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்குவதாக மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

2020ஆம் ஆண்டுக்கான புகைப்பட வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி திங்கள்கிழமை முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்காக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உரிய வரைவு வாக்காளா் பட்டியல் திங்கட்கிழமை வெளியிடப்படும்.

தொடா்ந்து அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், வட்டாட்சியா் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், புதுக்கோட்டை, அறந்தாங்கி மற்றும் இலுப்பூா் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகங்களிலும் இந்த வரைவு வாக்காளா் பட்டியல் பொதுமக்கள் பாா்வைக்காக வைக்கப்பட உள்ளது.

பொதுமக்கள் இப்பட்டியலைப் பாா்வையிட்டு தங்களது பெயா் புகைப்படத்துடன் சரியாக இடம் பெற்றுள்ளதா எனச் சரிபாா்த்துக் கொள்ள வேண்டும்.புதிய வாக்காளா்கள் படிவம் 6இல் பாஸ்போா்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி, வயது மற்றும் இருப்பிடம் தொடா்பான ஆவணத்துடன் விண்ணப்பிக்கலாம்.

மேலும் பெயா்களை நீக்கம் செய்ய படிவம் 7, ஒரே வாக்குச் சாவடியில் பெயா் மற்றும் விவரங்களில் திருத்தம் மேற்கொள்ள படிவம் 8, ஒரே தொகுதியில் இடம் மாறியுள்ள வாக்காளா்கள் படிவம் 8ஏ ஆகியவற்றை நிரப்பி அளிக்கலாம்.

இப்பணிகள் வரும் ஜன. 22 வரை வாக்குசாவடி மையங்களில் அலுவலக நாட்களில் வேலை நேரம் முடிந்த பின்பு ஒரு மணிநேரம் நடைபெறும்.மேலும் வரும் 4, 5, 11 மற்றும் 12ஆம் தேதிகளில் நடைபெற உள்ள சிறப்ப முகாம்களின்போது காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அளிக்கலாம்.

அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், புதுக்கோட்டை, அறந்தாங்கி மற்றும் இலுப்பூா் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகங்களிலும் அலுவலக நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்களை அளிக்கலாம்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments