சவூதி அரேபியாவிற்கு வேலைக்கு சென்ற கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த வாலிபரை காணவில்லை..!சவூதி அரேபியாவிற்கு வேலைக்கு சென்ற கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த ரமலான் கான் என்பவரை கடந்த நான்கு மாதங்களாக காணவில்லை.

தமிழ்நாடு: புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுகா, நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த முஹம்மது யூசுப் அவர்களின் மகன் ரமலான் கான் அவர்கள் கடந்த 31.03.2018 அன்று சவூதி அரேபியா தம்மாமை தலைமையிடமாக கொண்டு செயல்படும் SRACO Sub Contract கம்பெனிக்கு வேலைக்கு சென்றார். சப்கான்ட்ராக்ட் கம்பெனி என்பதால் தம்மாமில் இருந்து ரியாத்தில் உள்ள ஸாபிக் கம்பெனியில் மெய்ட்னன்ஸ் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 31.07.2019 அன்று வரை அங்கு வேலை பார்த்த வந்த நிலையில் ரியாத்தில் இருந்து ஜுபைல் பகுதிக்கு பனி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

இந்நிலையில் ரியாத்தில் இருந்து ஜுபைல் சென்றவர் கம்பெனிக்கு செல்லவில்லை. இது சம்மந்தமாக கம்பெனியில் விசாரித்ததில் அவர் மீது காவல்நிலையத்தில் கம்பெனியை விட்டு வெளியேறிவிட்டார் என்று (குரூப்) புகார் பதிவு செய்துள்ளதாக தெரிவித்தனர். மேலும் இவருடைய தொலைபேசி எண் சுவிச்ஆப் செய்யப்பட்டுள்ளது. இவர் கடைசியாக ரியாத்தில் இருக்கையில் வீட்டிற்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார். எனவே இவரை காணாமல் இவருடைய குடும்பத்தினர் மிகுந்த துயரத்தில் உள்ளனர். எனவே நீங்கள் புகைப்படத்தில் காணும் நபரை காண நேரிட்டால் உடனடியாக கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.

குறிப்பு: இவர் ஜுபைல் பகுதியில் தங்கி இருப்பதற்கு அதிகம் வாய்ப்புகள் உள்ளது. எனவே ஜுபைல் பகுதியில் உள்ளவர்களுக்கு இந்த பதிவை அதிகம் பகிரவும்...

தொடர்புக்கு...
முஜிபு ரஹ்மான், தம்மாம் - 0504943568
சித்திக் ரஹ்மான், தம்மாம் - 0554695152
முகம்மது நூருல்லாஹ், தம்மாம் - 0530414612   

இந்தியா தொடர்புக்கு:
முஹம்மது ராவுத்தர் - +917708741786
அப்துல் சுக்கூர் - +919790282250
GPM மீடியா - https://wa.me/918270282723

சவுதி அரேபியாவில் உள்ள நண்பர்களுக்கு அதிகம் இந்த பதிவை பகிர்ந்து (Share) காணாமல்போனவரை கண்டுபிடிக்க உதவுங்கள்....
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments