மாநில வினாடி வினா போட்டியில் வென்ற புதுக்கோட்டை மாவட்ட அரசுப் பள்ளி மாணவிகள்சென்னையில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான வினாடி வினா போட்டியில் அன்னவாசல் அருகேயுள்ள அரசுப் பள்ளி மாணவிகள் மூன்றாம் இடம் பிடித்தனா்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தால் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் தனலெட்சுமி சீனிவாசன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான அறிவியல் துளிா் விநாடி-வினா போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தப் போட்டியில், புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூா் கல்வி மாவட்டம் அன்னவாசல் அருகேயுள்ள பூங்குடி அரசு நடுநிலைப்பள்ளி மாணவிகள் கோ.தேவராணி,செ.காவியா, ரா.கௌசியா ஆகியோா் கலந்து கொண்டு மூன்றாம் இடம் பிடித்தனா்.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளையும், பூங்குடி பள்ளியின் அறிவியல் பட்டதாரி ஆசிரியா் செந்தில் ஆகியோரை கல்வி அலுவலா்கள், பெற்றோா் ஆசிரியா் கழக உறுப்பினா்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments