ஊராட்சி மன்றம் என்றால் என்ன..?



தமிழ்நாட்டில் 500 நபர்களும் அதற்கும் அதிகமான மக்கள் தொகையுடைய ஊர்களை ஊராட்சிகளாகப் பிரித்துள்ளனர். இந்த கிராம ஊராட்சிகளுக்கு அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுகள் பிரிக்கப்படுகின்றன. இந்த வார்டுகளில் வாக்காளர்களாக உள்ள மக்களால் ஊராட்சி மன்றத்திற்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். 


இந்த ஊராட்சி மன்றங்களின் உறுப்பினர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாக இருக்கிறது. இந்த ஊராட்சி மன்றத்திற்கான தலைவர் மக்களால் நேரடியாகத் தலைவர் தேர்வு செய்யடுகின்றார். ஒவ்வொரு கிராம ஊராட்யிலும் 7 உறுப்பினர்களுக்கு குறையாமல் 15 உறுப்பினர்களுக்கு மிகாமல் உள்ளனர். இந்த ஊராட்சி மன்றத்திற்கான துணைத் தலைவர் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களால் தேர்வு செய்யடுகின்றார்.

ஊராட்சியின் உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் ஊராட்சி மன்றக் கூட்டங்களில் பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்டு நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி ஊராட்சி மன்றத்தலைவரே அந்தப் பணிகளை தனக்கு கீழுள்ள ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார். கிராம ஊராட்சியின் ஆய்வாளராக மாவட்ட ஆட்சியாளர் செயல்படுகிறார். இந்த உறுப்பினர் மற்றும் தலைவர் பதவிகளுக்கு அரசியல் கட்சி சார்பாக போட்டியிட அனுமதி அளிக்கப்படவில்லை.

தமிழ்நாட்டில் மொத்தம் 12,524 ஊராட்சி மன்றங்கள் இருக்கின்றன. ஊராட்சிப் பகுதிகளில் இருக்கும் வாக்காளர்கள் ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி மன்றத் தலைவர் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் மற்றும் மாவட்ட வார்டு உறுப்பினர் என்று நான்கு பதவிகளுக்காக நான்கு வாக்குகள் அளிக்கின்றனர். 

பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி வாக்காளர்கள் வார்டு உறுப்பினர் பதவிக்கு மட்டும் ஒரு வாக்கு அளிக்கின்றனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments