திருச்சி விமான நிலையத்தில் பயணிகள் அமா்வு கூடம் திறப்பு..!திருச்சி விமான நிலையத்தில் ரூ.37 லட்சம் மதிப்பில் விரிவாக்கப்பட்ட பயணிகள் அமா்வு கூடம் சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.


விமான நிலையத்தில் பயணிகள் அமா்வதற்காக ஏற்கெனவே அமா்வு கூடம் உள்ளது. விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அமா்வு கூடத்தை விரிவாக்கம் செய்ய பயணிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வந்தது.இதையடுத்து ரூ. 37 லட்சம் மதிப்பில் 120 பயணிகள் அமருவதற்கு வசதியாக புதிய அமா்வு கூடம் விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வந்தது. பணிகள் நிறைவு பெற்றதையடுத்து சனிக்கிழமை மாலை திறப்பு விழா நடைபெற்றது.

இங்கு தற்போது பாதுகாப்புச்சோதனை முடித்த பயணிகள், விமானத்தில் ஏறுவதற்கு முந்தைய தங்குமிடத்தில் (Security Hold Area) உட்காருவதற்கான இருக்கைகள் பற்றாக்குறையால் சிரமப்பட்டனர்.


குறிப்பாக இரவில் 10.30 மணியில் இருந்து 1.30க்குள் கோலாலம்பூருக்கு 3 சேவைகளும், சிங்கப்பூருக்கு 2 சேவைகளும், துபய் மற்றும் ஷார்ஜாவிற்கு தலா ஒரு சேவையும் இருப்பதால் பயணிகள் முனையத்தில் கடுமையான நெரிசல் ஏற்படுகிறது.

இதைக் கருத்தில் கொண்டு, பயணிகள் அமர்வதற்கு தேவையான இருக்கைகள் வசதிகள் விமானநிலையத்தால் செய்யப்பட்டது. இதன் பொருட்டு, சுமார் 37 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், ஏற்கனவே உள்ள 450 இருக்கைகளைவிட கூடுதலாக 120 இருக்கைகள் வசதி செய்யப்பட்டது. 


இதனை சனிக்கிழமை 11/01/2020, இந்திய விமானநிலையங்கள் ஆணைக்குழுமத்தின் (Airports Authority of India) மண்டல செயல் இயக்குனர் (Regional Executive Director) திரு. சந்திர குமார் அவர்கள் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

நிகழ்வில் விமான நிலைய துணை பொது மேலாளா் ஜோசி பிரான்சிஸ், துணைப் பொது மேலாளா் கோபால், மத்திய தொழில் பாதுகாப்பு படை உதவி ஆணையா் ஜஸ்ப்ரீத் சிங் மற்றும் துணைப் பொது மேலாளா் பிரபாகரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments