மத்திய பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த 48-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் சி.ஏ.ஏ மற்றும் என்.ஆர்.சி பிரச்சனை காரணமாக கட்சியில் இருந்து விலகியுள்ளனர்.
கட்சித் தலைவர்கள் தங்களிடம் பாகுபாடு காட்டுவதாகவும் பாஜகவில் ஜனநாயகம் எஞ்சியிருக்கவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
CAA மற்றும் NRC க்கு எதிராக நாடு தழுவிய எதிர்ப்புக்களைக் கட்டுப்படுத்த பாஜக கடுமையாக போராடி வருகிறது. இப்போது கட்சியிலும் அதனால் பிரச்சனைகளை சந்தித்துள்ளது.
மத்திய பிரதேச மாநில, போபாலில் உள்ள கட்சியின் சிறுபான்மை பிரிவினைச் சேர்ந்த 48 பாஜக நிர்வாகிகள் சர்ச்சைக்குரிய சிஏஏ சட்டம் தொடர்பாக பிரச்சனை எழுப்பி பாஜகவில் இருந்து விலகியுள்ளனர்.
பாகுபாடு கட்சியில் விலகிய தலைவர்கள் கட்சிக்குள் பாகுபாடு காட்டுவதாகவும், கட்சி உறுப்பினர்கள் ஒரு சமூகத்திற்கு எதிராக மோசமான கருத்துக்களை தெரிவிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
வீடு வீடாக ஆதரவு எங்காவது பார்த்தீர்களா போபாலின் பாஜக சிறுபான்மை பிரிவு துணை தலைவர் பதவியில் இருந்து விலகிய ஆதில்கான், ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், பாராளுமன்றத்தில் ஒரு அரசாங்கம் ஒரு சட்டத்தை இயற்றிவிட்டு, பின்னர் வீடு வீடாகச் சென்று ஆதரவைக் கோருவதை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? என கேட்டுள்ளார். குடியுரிமை (திருத்தம்) சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய பிரச்சனைக்காக சனிக்கிழமை ஆதில்கான் பதவி விலகினார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.