கிராம ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம்: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.!



அம்மா இளைஞர் விளையாட்டு திட்டத்தின்படி, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையால் அம்மா இளைஞர் விளையாட்டுக் குழு அமைக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.


அம்மா இளைஞர் விளையாட்டு திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத் தொடரின் போது 110ஆவது விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கிராம ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.

இந்த திட்டத்தின்படி, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையால் அம்மா இளைஞர் விளையாட்டுக் குழு அமைக்கப்படும். ஒவ்வொரு கிராமத்திலும், கபடி, வாலிபால், கிரிக்கெட், கால்பந்து போன்ற ஏதேனும் மூன்று விளையாட்டுகளுக்கு களம் அமைக்கும் பணிகள் ஊரகப் பகுதிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழும் பேரூராட்சிகளில் பேரூராட்சிகள் பொது நிதியில் இருந்தும் மேற்கொள்ளப்படும்.

ஊராட்சி ஒன்றிய, மாவட்ட, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையால் பரிசுகள் வழங்கப்படும் எனவும் முதல்வர் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, அம்மா இளைஞர் விளையாட்டு திட்டத்தை செயல்படுத்த ரூ.76.23 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டது. 12,524 கிராம ஊராட்சிகள், 528 பேரூராட்சிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. விளையாட்டு உபகரணங்கள் வாங்க, விளையாட்டு போட்டிகள் நடத்த, விளம்பரம் செய்ய ரூ.38.85 கோடி ஒதுக்கப்பட்டது. அத்துடன் உடற்கல்வி இயக்குநர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மூலம் போட்டிகளை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், அம்மா இளைஞர் விளையாட்டு திட்டத்தை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments